Home இலங்கை சமூகம் இலங்கையில் பாரிய மண்சரிவினால் அழிவடைந்த வீடுகள்: பலர் வெளியேற்றம்

இலங்கையில் பாரிய மண்சரிவினால் அழிவடைந்த வீடுகள்: பலர் வெளியேற்றம்

0

எஹெலியகொட (Eheliyagoda) – கெடஹெத்த உடவக்க பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்றின் காரணமாக 8 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மண்சரிவு இன்று (27ஆம் திகதி) மதியம் 1 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன், காலை முதலே மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, வீடுகளைச் சுற்றியிருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கீழே ஓடும் ஓயா முற்றாக தடைப்பட்டுள்ளதால், மேல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தேவையான நிவாரணங்கள்

இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 48 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் வெளியேற்றப்பட்டு உடவக்க சித்தார்த்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக எஹெலியகொட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version