Home இலங்கை சமூகம் 1818 அறிமுகத்தின் பின்னர் 800 முறைப்பாடுகள் பதிவு

1818 அறிமுகத்தின் பின்னர் 800 முறைப்பாடுகள் பதிவு

0

பாடசாலைகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்க
அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர இலக்கம் மூலம் போதைப்பொருள் பயன்பாடு,
விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான 800க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த 800 முறைப்பாடுகளும் கடந்த நான்கு நாட்களுக்குள் பெறப்பட்டதாக பொது
பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு திட்டம்

நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் தொடர்பில்,
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர்
இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கையைத் தொடங்கிய முதல் நான்கு நாட்களுக்குள்,
பொலிஸார் 5,300 பேரைக் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் புழக்கம் 

இந்த நடவடிக்கைகளின் போது, கொழும்பு மாவட்டத்திலேயே போதைப்பொருள் புழக்கம்
கணிசமாக பரவலாக இருப்பது தெளிவாகத் தெரியவந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால
கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version