பல்கலைக்கழகங்களுக்காக இந்த வருடம் 87,000 மாணவர்கள் இணையவழியூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்குரிய அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த கூறியுள்ளார்.
Source: https://tamilwin.com/article/87-000-students-apply-online-to-universities-1721461628
