Home இலங்கை குற்றம் யாழில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

0

யாழ். அரசடி பகுதியில் 96 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

32 மில்லியன் ரூபா பெறுமதி 

யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையான நேற்றையதினம்(30) இடம்பெற்றுள்ளது.

இதன் மதிப்பு சுமார் 32 மில்லியன் ரூபா பெறுமதி என கூறப்பட்டுள்ளது.

மேலும், சாவகச்சேரி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்க்கது.

NO COMMENTS

Exit mobile version