சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இரா.சம்பந்தன் (R.Sampanthan) தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச வினவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயமானது தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள பிரதான செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பசில் ராஜபக்ச உள்ளார்.
ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்
நாடாளுமன்றத் தேர்தல்
ஏனைய கட்சிகள் அது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் உள்ளன என்று அறிவதற்கு அவருக்கு விருப்பம்.
முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என்று பசில் வினவியுள்ளார்.
எனினும், எடுத்த எடுப்பிலேயே அதிபர் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்று தூது கொண்டுவந்தவரிடம் சஜித் மற்றும் சம்பந்தன் தரப்பினர் செய்தி அனுப்பியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு வீழ்ச்சி
இலங்கைக்கு வந்து குவிந்துள்ள ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |