பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது முதல் குருந்தூர் மலை வரை பிக்குமாரின் பின்னணியை அமைச்சர் மகிந்தானந்த மறைக்கிறாரா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த விடையங்களை மறுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கருத்தினை பகிரும் போது மத தலைவர்கள் அரசியலில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் கோட்டாபய ராஐபக்ச அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
மகிந்த – கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: லக்ஷ்மன் கிரியெல்ல சாடல்
இனவாத தீ
அத்தோடு, 1957 பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஒரு தலைப் பட்சமாக பண்டார நாயக்க ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தமைக்கு பௌத்த மத தலைவர்களின் அரசியல் தலையீடு தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பண்டா செல்வா ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இலங்கைத் தீவு அபிவிருத்தி அடைந்த நாடாகவும் இன ஐக்கியத்துடனும் மாறி இருக்கும் எனவும் துரதிஸ்ட வசமாக பௌத்த பிக்குமார் அரசியலில் புகுந்து வளர்த்த இனவாத தீ முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி விட்டதாகவும் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அன்று தொடங்கிய இனவாதம் இன்றும் குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை வரை தொடர்வது நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்தவுக்கு தெரியாதா? புரியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அல்லது பிக்குமார் அரசியலில் தலையிட்டால் தவறு இல்லையென எழுதப்படாத யாப்பு உண்டா? ஏனைய மத தலைவர்கள் நீதி நியாயம் கேட்டால் அரசியல் தலையீடா? எனவும் கேட்டுள்ளார்.
அவர்களது மடியில் கனம் இல்லை என்றால் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சுதந்திர விசாரணை மூலம் நீதியை பெற்றுக் கொடுத்திருக்கலாமே. ஆகவே ஏன் அதனைச் செய்யவில்லை? என்றும் குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி: விமர்சிக்கும் டக்ளஸ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |