மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியோரைப் போல் ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe) தமிழ் மக்களின் எதிரியாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்சுமன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு…! மே நடுப் பகுதியில் கருத்துக் கணிப்பு அறிக்கை
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றியடைவார்.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அரசியல் தீர்வு காணப்படும் என்பதுடன் அவர் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பார்.
அத்துடன் எந்த அரசியல் தலைவருடன் பகிரங்க விவாதத்துக்குத் சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளராகவே களமிறங்குவார் ரணில் : ரவி மீண்டும் கூறுகின்றார்
நாட்டில் அதிகரித்து வரும் நோய் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |