யாழ். மாநகர சபைக்குட்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற வியாபாரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபகிஷ்கரிப்பானது, நேற்று (28.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், “எமது
சந்தை யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்டு இயங்கி வருகின்றது.
வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் – சாணக்கியன் இடையே வாக்குவாதம்
முறைப்பாடுகள்
நாம் சந்தை
குத்தகை பணத்தையும் மாநகர சபைக்கு செலுத்தி வருகின்றோம். இந்நிலையில் கடந்த
மூன்று வருடங்களாக கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து எமது சந்தைக்கு
எதிரே உள்ள வீதியோரத்தில் தனியார் ஒருவர் மரக்கறி சந்தையினை நடாத்தி
வருகின்றார்.
இது குறித்து நாம் யாழ். மாநகர சபைக்கு அறிவித்திருந்தோம். இந்நிலையில், மாநகர
சபை குறித்த பகுதி நல்லூர் பிரதேச சபைக்கு உரிய இடம் என தெரிவித்தது.
மேலும், இது குறித்து நல்லூர் பிரதேச சபைக்கும் முறையிட்டோம். பின்னர் இதற்கு பொலிஸாரிடம் முறையிடுமாறும் கோரப்பட்டது.
பொலிஸாரிடமும் முறையிட்டோம், ஆனால், மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு
தண்டபணம் விதிக்கபட்ட பொழுதிலும் அவர்கள் மேன்முறையீடு செய்து தற்பொழுதும்
கடையினை நடாத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில், நாம் வடமாகாண ஆளுநர் உட்பட
சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவித்த
பொழுதிலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
ஜி.எல். பீரிஸிடம் தமிழர் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |