யாழில் அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை 2300 கிராம் கேரள
கஞ்சாவுடன் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நேற்று(13.06.2024) மந்திகை பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர விசாரணைகள்
இதன்போது கற்கோவளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபரே கைதாகியுள்ளார்.
நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபர் தொடர்பில் அரச
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டு வந்த அரச புலனாய்வு பிரிவினர் விற்பனை நோக்கத்திற்க்காக
கஞ்சாவை கொண்டு செல்லும்போது சந்தேக நபரை கைது
செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நெல்லியடி பொலிஸார் இன்று(14)சந்தேக நபரை பருத்திதுறை நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.