நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக அரச சேவை ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (18.06.2024) கொழும்பு (colombo) – பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், போராட்டத்தின் போது ஏற்படும் கலகத்தை தடுப்பதற்கு நீர்த்தாரை பிரயோக வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீர்த்தாரை பிரயோக வண்டிகள்
இதன்போது, அரச சேவையாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வலியுறுத்தி குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் (2020.01.01) திகதியிற்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அந்தக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியும் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை போராட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம்
இதேவேளை, நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘தொழில் உரிமையாகும்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.