2024 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி இமாலய வெற்றிப் பெற்றுள்ளது.
அந்தவகையில், நேற்று (17) இடம்பெற்ற முதற்சுற்றின் இறுதிப் போட்டியிலேயே மேற்கிந்திய அணி குறித்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை குவித்துள்ளது.
இமாலய வெற்றி
குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிக்கலெஸ் பூரன் (Nicholas Pooran) அதிகபட்சமாக 98 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கமைய, 219 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியுள்ளது.
மேலும், மேற்கிந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஓபேட் மெக்காய் (Obed McCoy) மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.