இலங்கைக்குள் (Sri Lanka) இணக்கம் மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்க உழைத்த மூத்த தமிழ் அரசியல்வாதியான சம்பந்தனின் (Sampanthan) மறைவு குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ‘x’ தளத்தில் இட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் குறித்த பதிவில்,
“சிறுபான்மையினரின் சம உரிமைகளுக்கான சம்பந்தனின் வாதங்கள் அனைத்து இலங்கை பிரஜைகளினதும் மனித உரிமைகளை முன்னேற்ற உதவியது.
ஆழ்ந்த இரங்கல்
அத்துடன், அவருடைய வாதங்கள் இலங்கை மக்களிடையேயான ஒற்றுமையையும் ஊக்குவித்தது.
Deeply saddened to hear of the passing of MP R. Sampanthan, a veteran Tamil politician who worked to create a cohesive, peaceful society within Sri Lanka. His advocacy for equal rights for minorities helped advance broader human rights for all Sri Lankan citizens, and encouraged…
— Ambassador Julie Chung (@USAmbSL) July 1, 2024
அமெரிக்க நாட்டின் சார்பாக அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றுள்ளது.
you may like this