இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் – இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
ஹோவ் கவுன்டி மைதானத்தில் நேற்று(03) நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 4 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.
லூக் பென்கென்ஸ்டீன்
லூக் பென்கென்ஸ்டீன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களையும், சார்ளி அலிசன் துடுப்பெடுத்தாடி 87 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், மழை காரணமாக 45 ஓவர்களாக போட்டி மடடுப்படுத்தப்பட்ட நிலையில் 265 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், 265 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 44.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை சார்பாக கயன வீரசிங்க 80 ஓட்டங்களையும் மஹித் பெரேரா 53 ஓட்டங்களையும் புலிந்து பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ப்ரெடி மெக்கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹெரி முவர் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.