கிளிநொச்சி (Kilinochchi) ஏ-09 வீதியில் அரச பேருந்தும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (07) பகல் ஒரு மணியளவில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலை
இந்தநிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கிளிநொச்சி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.