அமெரிக்காவின் மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில்19 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தடயவியல் நிபுணர்கள்
இந்நிலையில் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதன்போது தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்ததோடு சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.