முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கை

தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் இன்றைய தினமும்
தமது பிள்ளைகளுடன் வந்து கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம் 

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்
நினைவுத்தூபிக்கு முன்பாக முன்பாக ஒன்றுகூடிய பட்டதாரிகள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

ஏனைய மாவட்டங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற
பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோரிக்கை
விடுக்கப்பட்டது.

இதன்போது தமது தொழில் நியமனத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்கள்
எழுப்பப்பட்டன.

பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்,கல்வி கொடுத்த அரசே
கொள்ளிவைக்கலாமா?, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே போன்ற
வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஏந்தியிருந்தனர்.

வருடங்கள் போகபோக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை
பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில்
கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்