இந்தியன் 2
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு, மேக்கப் பற்றி தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தான் முடிவிற்கு வந்தது. பல பிரச்சனைகள் மற்றும் தடைகளை தாண்டி இப்படத்தில் படப்பிடிப்பை படக்குழு முடித்தது.
இப்படம் ரிலீஸ் ஆன நாள் முதலில் இருந்தே டிரெண்டிங்கில் தான் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரிக்க இதுவரை மொத்தமாக ரூ. 124 கோடி வரை இந்தியன் 2 வசூலித்துள்ளதாம்.
ரஜினி பேச்சு
இந்த நிலையில் இந்தியன் 2 படம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம், இந்தியன் 2 படம் பார்த்தாச்சா?, படம் எப்படி இருக்கு? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இன்னும் பாக்கல, நாளைக்கு தான் படம் பார்க்கப்போகிறேன் என கூறியிருக்கிறார்.
தனது நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பார்த்து ரஜினி படக்குழு குறித்து என்ன கூறுகிறார், நண்பர் நடிப்பு குறித்து என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.