வடமேற்கு சீனாவின்(china) ஷான்சி மாகாணத்தில் நெடுஞ்சாலை பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளம்
அப்பகுதியில் பெய்த கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மீட்புக் குழுவினர் தலையிட்டு பாலம் இடிந்து விழுந்த பகுதியில் 05 வாகனங்கள் ஆற்றில் விழுந்து கிடந்ததை கண்டு அவற்றை மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 30 பேரை காணவில்லை, அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/AhTKxWNQVaM