கொழும்பு (Colombo) துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி செயற்பாடுகள்
இந்தநிலையில், கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 6(1) (c) பிரிவின் விதிகளின்படி மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.