முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுக்கு பெருகும் ஆதரவு : இணையும் எம்.பிக்கள் கூட்டம்

சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உறுதியளித்துள்ளனர்.

இன்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த விடயத்தினை தெரிவித்தனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான் (Ishak Rahuman), புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் (Ali Sabri Raheem) மற்றும் திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் (S.M.M. Muszhaaraff) ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

ஆதரவு தெரிவிப்பு 

இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நாவானந்தா, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.வேலு குமார், திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரன் சங்கர் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சியும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு பெருகும் ஆதரவு : இணையும் எம்.பிக்கள் கூட்டம் | Several Mps Politicians Support To President Ranil

இவர்கள் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் தேர்தலில் அவருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.