முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்

இலங்கைக்கு மேல் பயணிக்கும் சர்வதேச விமானங்கள் மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்களை கையாளும் இரத்மலானை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் இயங்குதளம் திடீரென செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம்  (14 ஆம் திகதி) முதல் நேற்று காலை (15 ஆம் திகதி) வரையில் சுமார் 12 மணிநேரம் செயலிழந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என்றும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள் | Aircraft Platform That Has Suddenly Shut Down

வானில் பறக்கும் விமானங்களுடனான தொடர்புகள் தடை

இருப்பினும், அதிகாரிகளால் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக கையாள முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வி.எச்.எஃப். விமானத்துடன் தொடர்பு கொள்ள 124.9 அதிர்வெண் பயன்படுத்திய போது திடீரென்று அந்த அலைவரிசையின் செயற்பாடுகள் தடைப்பட்டன.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள் | Aircraft Platform That Has Suddenly Shut Down

இதன் காரணமாக வானில் பறக்கும் விமானங்களுடனான தொடர்புகள் தடைப்பட்டன. கணினியை மீட்டெடுக்க மின்னணு பொறியாளர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான பிரிவில் உதவி பெற்று இரத்மலானை விமான நிலைய உத்தியோகத்தர்களை கட்டுநாயக்கவிற்கு அனுப்பி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செயலிழந்த விமான அமைப்பை நேற்றைய தினம் (15 ஆம் திகதி)  பொறியாளர்கள் மீட்டெடுத்துனர்.

இலங்கை வான்பரப்பிலிருந்து 15000 அடி உயரத்தில் பறக்கும் அனைத்து விமானங்களும் இரத்மலானையில் உள்ள பிரதான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்