முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வில்லை : அனந்தி சுட்டிக்காட்டு

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வில்லை என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan) தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்ற அரசியல்வாதிகளுடனான நிகழ்ச்சியொன்றில் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் (Sri Lanka) அரசியல் அமைப்பிலுள்ள 6வது திருத்தச் சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் நீங்களும் நாங்களும் கேட்காமலேயே எங்கள் மீது பாய்கின்றது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம்

ஆனால் அரசியல் அமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏன் மறுக்கின்றீர்கள். இந்த விடயத்தில் நாங்கள் அரசாங்கத்திடமே கேள்வி கேட்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தமாக சர்வதேச உடன்படிக்கையாக வந்த சட்டம். அந்த ஒப்பந்த்தில் இலங்கையின் தரப்பில் ஜே. ஆர். ஜயவர்தனவும் (J. R. Jayewardene) எங்களுக்காக ராஜீவ் காந்தியும் (Rajiv Gandhi) கையொப்பமிட்டிருந்தனர்.

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வில்லை : அனந்தி சுட்டிக்காட்டு | 13Th Amendment Wasnt The Solution Ethnic Problem

87 இல் இருந்த காணிகளும் மக்களும் இன்றைக்கு இல்லை. இலட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்துவிட்டோம். 87 இல் இருந்த காணிகள் எல்லாம் சுவீகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்தியா கூட எங்களுக்காக கவலைப்படவில்லை. தற்போதும் நாங்கள் 13ஐப் பற்றியே பேசுகின்றோம்.

ஆகவே இந்த சட்டம் எங்களுக்கு ஒருபோதும் பொருத்தமில்லை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். இந்த மாகாண சபையில் சாதாரண பணியாளரை கூட நியமிக்க முடியாத அதிகாரம் தான் 13வது திருத்தச் சட்டத்தில் இருந்தது என்பதை அனுபவ ரீதியாக பகிர்ந்து கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.