முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு

மலையக மக்களின் 200 வருட கனவை நனவாக்கும் விடயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்
(Ranil Wickremesinghe)தேர்தல் விஞ்ஞபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் (A. Aravind Kumar) தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது
முழுநாட்டிற்கு ஏற்றவாறும் முழுநாட்டையும் துரிதகதியில் அபிவிருத்தி செய்யும்
நோக்கில் இருக்கின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (29.08.2024)  இடம்பெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களின் வாழ்க்கை 

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், ”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல்
விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் மலையக மக்களின் வாழ்க்கை
முறைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு கொள்ளை பிரகடனமாக அமைந்துள்ளது.

இதுவரையிலும்
இந்த நாட்டில் பல்வேறு ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போதும் கொள்கை பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எந்தவொரு கொள்கை பிரகடனமும் இது
போன்று வெளியிடப்பட்டதில்லை இது குறித்து நான் பெரிதும்
மகிழ்ச்சியடைகின்றேன்.

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு | Ranil S Manifesto For Up Country People Education

மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனத்தை
முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். அதுமட்டுமன்றி ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவின் வெற்றிக்கு முழுமூச்சாக செயற்படுவோம்.

தற்போதைய ஜனாதிபதி
கல்வித் துறையினை மேம்படுத்துவதற்கு எவ்வாறான செயற்பாடுகளை கொண்டுள்ளார் என்பதை
அனுபவ ரீதியாக நான் அறிந்துள்ளேன். இதுவரையிலும் எந்த ஒரு ஜனாதிபதியும் காட்டாத
அக்கறையை கல்வித்துறையில் வெளிக்காட்டியிருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளர்

நாடு முன்னேறுவதற்கு
கல்வி அடித்தளமாக அமைகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் ஒரு இருண்டயுகம் காணப்பட்டது. அந்த
இருண்ட யுகத்தை குறுகிய காலத்தில் சீர்செய்த பெருமை தற்போதைய ஜனாதிபதிக்கே உரியது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள்
களமிறங்கியுள்ளார்கள். அதில் அனுபவம் வாய்ந்த ஒரே ஜனாதிபதி வேட்பாளர் ரணில்
விக்ரமசிங்க மாத்திரமே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு | Ranil S Manifesto For Up Country People Education

ஆகையால் அவரின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் வெற்றியூடாக
முழு இலங்கையும் முன்நோக்கி நகரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

இந்த கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயற்பாடுகள் ஊடாக
காட்டுவதற்கு பாரிய பொறுப்புள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி
முதல் அவரின் செயற்பாடுகள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக இயங்கும் என்ற
எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது.“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.