ரஜினிகாந்த்
சினிமாவில் முன்னணி நடிகராக 73 வயதை எட்டியும் தற்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் படம் வரும் 10 – ம் தேதி வெளிவர உள்ளது. அதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார் என தகவல் வெளியானது.
பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ.. யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா
ஐசியூ பிரிவில் ரஜினிகாந்த்
அவருக்கு அடிவயிற்றில் ஸ்டெண்ட் பொறுத்தப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை சற்று நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்டு அவர் ஐசியூ-வில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
24 மணி நேரத்திற்கு ரஜினிகாந்த் ஐசியூ பிரிவில் இருப்பார் எனவும், அதன் பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.