மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான வட் வரியை ஏய்ப்புச் செய்த நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பணிப்பாளர்களான கணவன் – மனைவி ஆகியோருக்கே கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த தம்பதி தமக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலமாக செலுத்தப்பட வேண்டிய வட் வரி சுமார் மூன்று கோடி ரூபாவைச் செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்துள்ளனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
அதற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த தம்பதியினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் மூன்று கோடி ரூபா வரியை செலுத்த மேலும் ஐந்து வருட கால அவகாசம் கோரப்பட்ட போதும் அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மேற்குறித்த தம்பதிக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.