முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் உள்ளடக்கப்படாத முஸ்லிம்கள் : இம்ரான் மகரூப் ஆதங்கம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது மிகவும் கவலையைத் தருகின்றது என
திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், முன்னாள்
எம்.பியுமான இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.

கிண்ணியா (Kinniya) – குறிஞ்சாக்கேணியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) சமீபத்தில் அவரது
பிரத்தியேக ஆளணியில் பிரத்தியேக செயலாளர், பொதுசன தொடர்பு உத்தியோகத்தர்,
ஊடக செயலாளர் என 3 நியமனங்களைச் செய்துள்ளார்.

பிரத்தியேக ஆளணி

இந்த நியமனங்களில் முஸ்லிம்
ஒருவரும் உள்வாங்கப்படாமை எனக்கு மிகவும் கலையைத் தருகின்றது. கிழக்கு மாகாணம் 3 இனங்களும் வாழும் மாகாணம். இதில் முஸ்லிம்கள் கணிசமான
தொகையினர்.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் உள்ளடக்கப்படாத முஸ்லிம்கள் : இம்ரான் மகரூப் ஆதங்கம் | Muslims Avoid In Eastern Governor Exclusive Staff

எனவே, இம்மாகாண முஸ்லிம்களது கலாசார பாரம்பரியங்கள் அவர்களது
பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் தெரிந்து கொண்டால் தான் சகலருக்கும் நீதியான
சேவையை வழங்க முடியும்.

இவ்வாறான நிலையில் ஆளுநரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இருந்தால்
அவருக்கு முஸ்லிம்கள் தொடர்பான தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்
கூடியதாக இருக்கும். குறைபாடுகளை தவிர்த்துக் கொள்ளக் கூடிதாக இருக்கும்.

தற்போது அந்தச் சந்தர்ப்பம் ஆளுநருக்கு இல்லாமல் உள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் நல்ல மனிதர், கல்விமான், பல்கலைக்கழக மட்டத்தில்
நியாயமான முறையில் சேவை வழங்கியுள்ளார் என்றெல்லாம் நான் அறிந்துள்ளேன்.

இனரீதியான அரசியல்

அவர்
வகித்த முன்னைய பதவிகள் அனைத்தும் அலுவலகம் சார்ந்த பதவிகள் அதனால் அவரால்
எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாக பணியாற்ற முடிந்தது

எனினும் தற்போது அவர் வகிப்பது அரசியல் ரீதியான பதவி.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் உள்ளடக்கப்படாத முஸ்லிம்கள் : இம்ரான் மகரூப் ஆதங்கம் | Muslims Avoid In Eastern Governor Exclusive Staff

வடக்கு கிழக்கு
மாகாணங்களைப் பொறுத்தவரையில் இங்கு இனரீதியான அரசியல் ஊறிப் போயுள்ளது.
இந்நிலையில் அரசியல்வாதிகள் தங்களது கோரிக்கைகளை வெல்வதற்காக அடுத்த இனத்தை
குறைகூறும் பண்பு இருப்பதை கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நான்
அவதானித்துள்ளேன்.

இதனால் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.

இந்நிலையில் முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது
அதன் உண்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒருவர்
அளுநரது அருகில் இருப்பது அவசியமென நான் கருதுகின்றேன். அவ்வாறான ஒருவர் தேசிய
மக்கள் சக்தியைச் சேர்ந்தவராய் இருந்தால் கூட பரவாயில்லை.

எனவே, இந்த விடயங்களை ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது நியாயமான
செயற்பாடுகளுக்கும், எமது கட்சியும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் சிறந்த
மாற்றத்திற்கும் இது உறுதுணையாக இருக்கும்“ என அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.