பிரித்தானியாவின் நியூகேஸிலுள்ள குடியிருப்பு தெருவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடி விபத்தானது புதன்கிழமை(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 6 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணை
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர அழைப்புகள் அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீட்பு குழுவின் (Tyne and Wear Fire and Rescue Service) உதவி தலைமை அதிகாரி Lynsey McVay,
இந்த வெடி விபத்தில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 குடியிருப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல் கண்காணிப்பாளர் ஆடம்ஸ், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.