தேசிய மக்கள் சக்தி குறித்து மக்களிடையே ஒரு அலை ஒன்று இருக்கின்றது. இதற்கு காரணம் அரகலய போராட்டத்தின் தொடர்ச்சியால் உருவான விளைவே ஆகும்.
பாரம்பரிய அரசியல் வேண்டாம். ஊழல், மோசடிகள் அற்ற அரசாங்கம் வேண்டும் என்று மக்கள் சிந்தித்ததன் விளைவாக உருவானதே இந்த அநுர அலை.
தேசிய மக்கள் சக்தி என்பது ஒரு கவர்ச்சிகரமான மூடப்பட்ட கோட்டை. இந்த மூடப்பட்ட கோட்டைக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கொள்கைகளோடு, ஊழலற்ற அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.
ஆனால், தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் அநுர கூறிய விடயங்கள் அனைத்தும் வெறும் சொற்களாக இருக்கின்றனவே தவிர செய்கைகளாக இன்னும் மாறவில்லை என்றும் ஊடகவியலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் லங்காசிறியின் நேர்காணல் ஒன்றின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…