முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பரிதாபமாக மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துவிச்சக்கர வண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை இன்றையதினம் (26) காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், திருநெல்வேலி (Thirunelvely
) பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சிறிராகுலன் (வயது 79) என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சடலம் மீட்பு

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொது சுகாதார பரிசோதகரும் இன்றையதினம் டெங்கு ஒழிப்பு களத்தரிசிப்புக்காக மேற்குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர்.

யாழில் பரிதாபமாக மீட்கப்பட்ட முதியவரின் சடலம் | Elderly Man S Body Found After Bike Mishap

இதன்போது குறித்த முதியவர் துவிச்சக்கரவண்டி மீது விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விரைந்த கோப்பாய் காவல்துறையினர் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்