முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ்!

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதியுடன் ஒத்துழைக்க டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஒரு குழுவினர் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக ஈ. பி. டி.பி ஊடக செயலாளர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்போது, இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் இருபத்தைந்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், தடைப்பட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கை

கடற்றொழில் அமைச்சில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான கட்டளைச்சட்டங்கள் மற்றும் தடைப்பட்ட வேலைத்திட்டங்களை மீள நடைமுறைபடுத்துவதற்கு கட்சியின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்க தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ்! | Douglas Devananda Joins The President

இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதன் போது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.