புதிய இணைப்பு
நவம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் கூறியுள்ளார்.
அதன்படி, இந்த மாதமும் 12.05 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவிற்கும், 05 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 1,474 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

முதலாம் இணைப்பு
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை லிட்ரோ எரிவாயு (Litro gas) நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டரின் விலை
அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி
இதேவேளை, லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடட்டிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விடயத்தை கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


