முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல கிரிக்கெட் வீரரின் வங்கி கணக்கு முடக்கம்

பங்களாதேஷ்(bangladesh) தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனின்(Shakib Al Hasan) அனைத்து வங்கிக் கணக்குகளையும் பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) கைப்பற்றியுள்ளது.

இந்த தகவலை பங்களாதேஷ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஹுஸ்னே அரா ஷிகா புதன்கிழமை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

கணவன், மனைவியின் வங்கி கணக்கு விபரங்கள்

முன்னதாக, ஒக்டோபர் 2 அன்று, ஷகிப் அல் ஹசன், அவரது மனைவி உம்மே அகமது ஷிஷிர் மற்றும் அவரது வணிக நிறுவனங்களின் அனைத்து வங்கிக் கணக்கு விபரங்களையும் பங்குச் சந்தை கையாளுதல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வழங்குமாறு பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) கோரியது.

விசாரணையைத் தொடர்ந்து அரசு அறிவுறுத்தலின் பேரில் சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டது.

பிரபல கிரிக்கெட் வீரரின் வங்கி கணக்கு முடக்கம் | Cricketer Shakib Al Hasans Bank Accounts Seized

ஷகிப் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார்.

அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரை இழப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வங்கதேச சீருடையில் களம் திரும்புவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இந்த நிலையில் சகலதுறைவீரரான ஷகிப்,செப்டம்பர் பிற்பகுதியில் டெஸ்ட் மற்றும் ரி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு

ஷகிப் 12வது பொதுத் தேர்தலில் அவாமி லீக்கின் வேட்பாளராக தனது சொந்த ஊரான மகுராவிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரபல கிரிக்கெட் வீரரின் வங்கி கணக்கு முடக்கம் | Cricketer Shakib Al Hasans Bank Accounts Seized

கடந்த ஓகஸ்ட் 5 அன்று, ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார், இதன் விளைவாக ஷகிப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கொலை வழக்கில் ஷகிப் பெயரிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.