சித்தார்த்
கடந்த 22 திரையுலகில் ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருப்பவர் சித்தார்த். பாய்ஸ் படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் இன்று வரை சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
கோலிவுட் மட்டுமின்றி, டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சூது கவ்வும் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2, கடுமையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவருடைய கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் விமர்சனத்தினர்.
மிஸ் யூ பாக்ஸ் ஆபிஸ்
நேற்று சித்தார்த் மற்றும் அஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளிவந்த மிஸ் யூ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், மிஸ் யூ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.