முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்

Courtesy: Sivaa Mayuri

இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கை நாட்டவர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்படுபவர்கள், விவசாய வேலைகளுக்கான விசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

எனினும் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறி, வெதுப்பகங்களில் பணிபுரிந்தனர்.

குறிப்பிடப்படாத வேலை வகைகளுக்கு மாறுவது

இந்தநிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆய்வுகளின் போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படுகின்றனர்.

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் | Sri Lankans Deported From Israel

இஸ்ரேலை பொறுத்த வரையில், வெளிநாட்டு தொழிலாளர் நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அத்துடன், வெளிநாட்டு பணியாளர்கள் அவர்களது அசல் விசா ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படாத வேலை வகைகளுக்கு மாறுவதை கண்டிப்பாக தடை செய்கிறது என்று இலங்கை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

விசா வகை மாற்றங்கள்

நாட்டுக்குள் நுழைந்த பிறகு இதுபோன்ற விசா வகை மாற்றங்களுக்கு எந்த சட்ட விதிகளும் இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் | Sri Lankans Deported From Israel

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு வருடத்திற்கு முன்னரும், இஸ்ரேலுக்கு பராமரிப்பு பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர்  நாடு கடத்தப்பட்டார்.

அதேநேரம் திருட்டு குற்றச்சாட்டின் பேரிலும் மற்றொரு இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்.

இதேவேளை, இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணுவதற்கும் தொழிலாளர்கள் தமது ஒப்பந்தக் கடமைகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்