முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல(Asoka Sapumal Ranwala ) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ முன்னாள் சபாநாயகரான அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
முன்னாள் சபாநாயகரின் கல்வி தகைமை
தனது கல்வி தகைமையை வெளிப்படுத்த நேரம் வழங்குமாறு அசோக ரன்வல கோரியுள்ளார். அதற்கமைய, அவருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்குள் அவர் தனது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்.” என வழக்கறிஞர் கூறியுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்படிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You May like this..
https://www.youtube.com/embed/-x4Rrm0QshQ