அறந்தாங்கி நிஷா
பெண்கள் திரைத்துறையில் சாதனை செய்வது என்பது கடினமான விஷயம், மேலே வரவே முடியாது என ஒரு காலத்தில் பேச்சு இருந்தது.
ஆனால் இப்போது அப்படி இல்லை, ஆண்களுக்கு நிகராக பெண்களும் சினிமா அல்ல எல்லா துறையிலும் சாதனை செய்து வருகிறார்கள்.
அப்படி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ஒரு கிராமத்தில் இருந்து வந்து தனது தனித்திறமையை வெளிக்காட்டி மக்கள் கொண்டாடும் பிரபலமாக உள்ளார் அறந்தாங்கி நிஷா.
காமெடி டிராக்கில் மாஸ் காட்டி வந்த இவர் நடிகையாக, தொகுப்பாளினியாகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.
வெயிட் லாஸ்
சினிமாவில் நுழையும் போது ஓரளவிற்கு குண்டாக இருந்த அறந்தாங்கி நிஷா இடையில் அதிக உடல் எடை ஏறி காணப்பட்டார். தற்போது அவர் கடுமையான டயட் பிறகு 50 நாட்களில் 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம்.
அவரது லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பதிவிட ரசிகர்கள் சூப்பர் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.