யாழ் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகு இன்று (23) காலை கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு ஆட்கள் யாருமற்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு உடன் தகவல் கொடுத்துள்ளனர்.
கடத்தல்காரர்கள்
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் காவல்துறையினர் படகை பார்வையிட்டதுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து வருகை தந்து கரையொதுங்கிய இலங்கை நாட்டிற்கு சொந்தமான குறித்த படகை கடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.