முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும்
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட
வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம்
வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நத்தார் ஆராதனைகள் நடைபெற்றது.
நத்தார் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு
வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம்
புத்தளம் அன்னை ஷாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12
மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.
ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக
ஒப்புகொடுக்கப்பட்டது.
இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள்
திருப்பலியில் கலந்து கொண்டனர்.
மலையகம்
மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை எட்வின் ரொட்ரிகோ அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ
தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன் இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் இடம்பெற்றதுடன் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை
மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை
நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் ஒப்புக்
கொடுக்கப்பட்டது.
பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக வழிபாடுகளில் பங்கு கொண்டிருந்தனர்.
அத்துடன் தேவாலயத்தை சுற்றி இராணுவம், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும்
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு ஆராதனைகள்
நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தின் பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி
மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்
அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக்
கொடுத்தனர்.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம்
வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நத்தார் ஆராதனைகள் நடைபெற்றது.
குறித்த ஆரானைகளின் போது
நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும்
நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நத்தார் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர், அருட்தந்தையர்கள், ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும்
அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.
ஆராதனையின் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
மூதூர் – இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் நத்தார் நள்ளிரவு ஆராதனை
அருட்தந்தை அன்ரன் சேவியர் அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நத்தார் நள்ளிரவு ஆராதனையில் அதிகளவு கிறிஸ்தவ மக்கள்
பங்குபற்றியிருந்தனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு – குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார்
நள்ளிரவு விசேட ஆராதனை இடம்பெற்றது
இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு – தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட
ஆராதனை இடம்பெற்றன.
இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸ்ன் அடிகளார்
தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இவ் ஆராதனையில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு – பிள்ளையாரடியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்திலும் நத்தார் தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில்
இடம்பெற்றது.
இயேசு பாலகனின் பிறப்பை பற்றிய பாடல்கள் பாடி இங்கு ஆராதனைகள்
நடைபெற்றன.
நத்தார் தின கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, கிறிஸ்தவ மாணவர்களுக்கு
இயேசு பாலகனின் பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும், பிரதான போதகரால்
வழங்கப்பட்டன.
இந்த நத்தார் தின ஆராதனையில் பெருமளவிலான கிறிஸ்தவ
பெருமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில், இன்று (25) நள்ளிரவு இடம்பெற்றது.
யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை
தலைமையில் ஆராதனைகள் நடைபெற்றது.
யேசுபாலனின் பிறப்பைக் கொண்டாடும் கத்தோலிக்க மக்கள் பெருமளவில் ஆராதனை நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட 51 இராணுவ தலைமையகம் மற்றும் யாழ்.மறை
மாவட்ட ஆயர் இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆராதனை நிகழ்வில் யாழ்.மறை மாவட்ட ஆஜர் அதி வணக்கத்திற்குரிய ஜஸ்ரின்
ஞானபிரகாசம் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் ம.பிரதீபன், பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்
தளபதி
மேஜர் ஜென்ரல் மானத ஜகம்பத் 513 வது படை பிரிவின்
கட்டளை தளபதி, 51 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் நிசாந்த
முத்துமால, 513 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் பிரசாந்த
ஏக்கநாயக்க பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
https://www.youtube.com/embed/fIDm-XSO0KM