சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் TRPல் டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது.
இதுநாள்வரை அனைவரையும் ஏமாற்றிய ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர். ஜீவா திருப்பி கொடுத்த ரூ. 30 லட்சம் பணத்தை ஏன் தன்னிடம் கூறவில்லை என கோபத்தின் உச்சியில் இருந்தார் விஜயா.
3 மணி நேரத்தில் 1 மில்லியன்.. விடாமுயற்சி முதல் சிங்கிள் ‘Sawadeeka’ வீடியோ இதோ
இதற்கு காரணம் ரோகிணி தான் என மனோஜ் கூறவும், இதுவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய ரோகிணியை விஜயா அடித்தார். இது வீட்டிலுள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்த வார ப்ரோமோ
இந்த நிலையில், அடுத்த வாரம் சிறகடிக்க ஆசையில் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், சாப்பிடுவதற்காக மனோஜ் பக்கத்தில் ரோகிணி அமருகிறார். ஆனால், விஜயா ரோகிணியை அந்த இடத்திலிருந்து எழுந்திருக்க கூறுகிறார்.
இதன்மூலம் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சேர்ந்து இருக்க கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரா விஜயா. பொறுத்திருந்து பார்ப்போம் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று. ப்ரோமோ வீடியோ இதோ..
View this post on Instagram