OTT
சமீபகாலமாக OTT நிறுவனங்கள் பெரிய ஹீரோக்களின் படங்களை பெரிய தொகைக்கு வாங்குவது இல்லை. தங்களுக்கு கட்டுப்படியாகிறதா என பார்த்துவிட்டு, அதன்பின் தயாரிப்பு நிறுவனம் கூறுவதை விட குறைவான தொகைக்கு தான் OTT நிறுவனங்கள் படங்களை வாங்குவதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
5 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இந்த நிலையில், சூர்யாவின் ரெட்ரோ படத்தின் OTT உரிமை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட்ரோ
இப்படத்தை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரெட்ரோ படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படத்தை ரூ. 80 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
A man’s love can move mountains, but his rage? That’s Retro! 💥
Retro, coming to Netflix in Tamil, Telugu, Malayalam & Kannada after its theatrical release!#NetflixPandigai pic.twitter.com/JgPzdeH48S— Netflix India South (@Netflix_INSouth) January 15, 2025