ஜீ தமிழ்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து டிஆர்பியை எப்படியாவது ஏற்றிவிட வேண்டும் என போராடுகிறார்கள் ஜீ தமிழ். மனசெல்லாம், கெட்டி மேளம் என தொடர்ந்து நிறைய புது சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.
இதற்கு இடையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் கதை இருந்தும் முடித்துவிட்டார்கள்.
இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்குமே செம ஷாக்கிங்காக இருந்தது.
தற்போது ஜீ தமிழின் புதிய ரியாலிட்டி ஷோ குறித்த ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது இதில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். இந்த தகவல் இப்போது சமூக வலைதளங்களில் வர ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள.
இதற்கு முன் விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி புதிய சீசன் அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram