நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். விவாகரத்து, தொடர்ந்து படங்கள் தோல்வி என அவர் சமீப காலமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
அடுத்து அவர் சிவகார்த்திகேயன் உடன் SK 25 படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் அந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
விலகிய ஹாரிஸ் ஜெயராஜ்
மேலும் ஜெயம் ரவி அடுத்து டாடா பட புகழ் இயக்குனர் கணேஷ் பாபு உடன் கூட்டணி சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் இசைமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் தற்போது திடீரென அதில் இருந்து விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக தற்போது சாம் சி எஸ் இசையமைக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.