அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற கொலை தொடர்பான மூவரில் ஒருவர் தொடர்பான அரசாங்க கோப்புகளை வெளியிட டொனால்ட் டிரம்ப்(donald trump) உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கோப்புகள் வெளியிடப்பட்டால் பல தசாப்தங்களாக மர்மமாகவே இருந்த பல நிகழ்வுகள் வெளிப்படும் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, முக்கிய கறுப்பின சிவில் உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் முன்னாள் செனட்டர் ரொபேட் எஃப். கென்னடி ஆகியோரின் படுகொலைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.


