விடாமுயற்சி
கிங் ஆஃப் ஓப்பனிங் என அழைக்கப்படும் ஹீரோக்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் அனிருத் இசையில் உருவான இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி
தமிழக வசூல்
மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது. இந்த நிலையில், 5 நாட்களை கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 5 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தில் இறுதிக்குள் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.