முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பின் விதிகளின்படி குறைக்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தற்போது தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுவதை அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை வெட்டுவதற்கு அரசியலமைப்பு தடையாக இருப்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.