டிராகன் படம்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவருக்கு 2வது படத்திலேயே நடிகராக கலக்கும் வாய்ப்பு கிடைத்தது.
லவ் டுடே என்ற படத்தை இயக்கி, நடித்தும் வெற்றிக் கண்டார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் மார்க்கெட் எங்கேயோ சென்றது என்றே கூறலாம்.
தற்போது இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார், படம் கடந்த வெள்ளிக்கிழமை தான் வெளியாகி இருந்தது.
முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம்.
பட ரைட்ஸ்
படத்திற்கு அமோகமான விமர்சனங்கள் வர பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் தெறிக்கும் வகையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி மற்றும் Netflix வாங்கியுள்ளதாம்.