நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஹீரோயின். அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் அந்த படம் பெரிய ஹிட் ஆகிவிடும் என்கிற நிலை தான் இருக்கிறது.
தமன்னா தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பகட்டத்தில் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்த படங்களில் பையா படமும் ஒன்று. அதில் கார்த்தி – தமன்னா ஜோடியின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது.
வயிற்று வலியால் கதறிய விஜயா, மனோஜ்.. சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ வீடியோ
முதலில் நடிக்க இருந்தது இவரா
அந்த ரோலில் முதலில் நயன்தாராவை தான் இயக்குனர் லிங்குசாமி ஒப்பந்தம் செய்தாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிவிட அதன் பிறகு தான் தமன்னாவுக்கு வாய்ப்பு சென்று இருக்கிறது.
பையா படத்தில் நடிக்கும்போது அவருக்கு 19 வயது தானாம். காரில் மும்பைக்கு செல்வது போல தான் கதை இருக்கும் என்பதால் ஷூட்டிங் ரோட்டில் தான் அதிகம் நடந்ததாம்.
அந்த இடங்களில் உடை மாற்ற கூட வசதிகள் இருக்காது, அதனால் அங்கு நான்கு பேரை சேலையை சுற்றி பிடிக்க சொல்லிவிட்டு தமன்னா உடை மாற்றி கொள்வாராம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமன்னா sincere ஆக நடித்தார் என இயக்குனர் லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.