சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அழகுக்கலை நிபுணர் ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் மதிப்புடைய 10,000 “பிளாட்டினம்” வகை சிகரெட்டுகள் அடங்கிய 50 கார்ட்டூன்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்
குறித்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் 03.30 மணியளவில் 8D-824 என்ற ஃபிட்ஸ் எயார் விமானம் மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும், சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

