முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம்

நோர்வேயின் (Norway) எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப (Donald Trump) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இடையே நடந்த சர்ச்சைக்குரிய சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமெரிக்க இராணுவத்திற்கு சுமார் 3,000,000 லிட்டர் எரிபொருளை வழங்கியுள்ள ஹால்ட்பேக் பங்கர்ஸ் என்ற நிறுவனம், முகப்புத்தகத்தில் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் படைகளுக்கான எரிபொருள்

அதன்போது, “தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியும் அவரது துணை ஜனாதிபதியும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பிய மிகப்பெரிய மோசமான நிகழ்ச்சியை இன்று நாங்கள் கண்டோம்,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம் | Norway Firm Stops Fuel Supply To Us

அத்தோடு, “அமெரிக்கா முதுகில் குத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திய போதிலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதற்கும் அமைதியாக இருந்தமைக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பாராட்டு” என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, “நோர்வேயில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கும், நோர்வே துறைமுகங்களை நாடும் அவர்களின் கப்பல்களுக்கும் எரிபொருள் வழங்குவதை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர்

இதேவேளை, ஹால்ட்பேக் பங்கர்ஸின் உரிமையாளர் கன்னர் கிரான், நோர்வே விற்பனை நிலையமான கிஸ்டென்ஸுக்கு அளித்த பேட்டியில் இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம் | Norway Firm Stops Fuel Supply To Us

அத்துடன், பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து, நிறுவனம் ஏற்கனவே ரஷ்ய நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளை நிறுத்தியதோடு, அதன் விளைவாக கணிசமான வருவாய் இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா உக்ரேனியர்களிடம் அவர்களின் நடத்தையின் அடிப்படையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹால்ட்பேக் பங்கர்ஸின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.