நடிகர் ஜீவா
தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் நடிகர் ஜீவா.
1991ம் ஆண்டு Perum Pulli என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக களமிறங்கினார்.
தமிழில் படங்கள் நடித்து வந்தவர் 2006ம் ஆண்டு Keerthi Chakra என்ற மலையாள படத்தில் நடித்தார்.
தொடர்ந்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வந்தவர் சமீபகாலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
மிஸ்ஸான படம்
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தவர் நடிப்பில் இந்த வருடம் அகத்தியா என்ற படம் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ஜீவா பேசும்போது, இயக்குனர் மணிரத்னம் படங்களை மிஸ் செய்தது குறித்து பேசியுள்ளார்.
இப்போது தயாராகும் தக் லைஃப் பட வாய்ப்பு கூட வந்தது, அதோடு இன்னொரு பட வாய்ப்பையும் மிஸ் செய்தேன் என கூறியுள்ளார், ஆனால் அது என்ன படம் என்று கூறவில்லை.